ரஹ்மான், இளையராஜா போட்ட acapella
பத்து தல படத்தில் இடம் பெற்ற நம்ம சத்தம் acapella பாடல் முறையை சார்ந்தது. இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் acapella முறை முன்பே பல பாடல்களில் வந்துள்ளது. பத்து தல acapella பாடல் போல வந்த பாடல்களை பற்றிய ஒரு அலசல் இந்தப் பதிவில் காணலாம்.
'Acapella' அப்புடி ந என்ன னு உங்களுக்கு தெரியுமா?
இசை கருவிகளோடு உதவி இல்லாம, பாடகர்கள் தங்களோட குரலையே use பண்ணி பாடலுக்கு தேவையான இசையையும் சத்தங்களையும் உருவாக்கி பாடும் பாடல் முறைக்கு பேர் தான் 'acapella'.
'Acapellaa' ஒரு இத்தாலிய வார்த்தை. அதுக்கு அர்த்தம் 'சர்ச் முறையில்' என்பது தான். பழைய கிறிஸ்துவ முறையில இசை கருவிகள் இல்லாம பாடுறது தான் ரொம்ப பிரபலம். அத வெச்சு தான் இந்த style of singing-க்கு acapella- னு பேர் வந்துது.
ஓ! அப்புடின்னா இந்த style foreign-உடையதா? தமிழ் சினிமால லாம் இந்த style- ல பாடல்கள் வந்ததே இல்லையா-னு கேட்டிங்கனா, அது தான் இல்ல.
தமிழோட முதல் acapella பாடல் எது என்பதுல இன்னும் பல விவாதங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு.
Ilaiiyaraaja & Acapella
இளையராஜா acapella முறையை பயன்படுத்தி இருக்காரா? ஏன் இல்ல?
நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச பிரபலமான 'இளமையென்னும் பூங்காற்று பாட்டு' - பகலில் ஒரு இரவு படத்துல வருமே, அந்த பாடல் ல ரிதம் கு மட்டும் பின்னாடி chorus பாடுவாங்க. அது இந்த பாடலுக்கு acapella மாதிரி ஒரு effect அ கொடுத்துச்சு.
இதே மாதிரி நம்ம தலைவரோட 'தளபதி' ல வர 'ராக்கம்மா கையத்தட்டு'ல கூட பாடல் முடியுற இடத்துல acapella style-ல use பன்னிருப்பாரு நம்ம maestro.
அறுவடை நாள் படத்துல வந்த "தேவனின் கோவில் மூடிய நேரம்" பாட்டுல கூட opening ராஜா ஹார்மோனி layers பாடி acapella effect கொடுத்திருப்பார்.
'நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்துல' அப்படிங்கற மாயா பஜார் (1995) பாட்டுல முழுக்கவே acapella செஞ்சு ஸ்கோர் பண்ணிருப்பார் ராஜா.
இது மட்டும் இல்லாம இன்னும் சில பாடல்கள்-ல கூட ராஜா அவர்கள் acapella-வ முறையா use பண்ணி இருப்பார்.
A R Rahman & Acapella
ராஜா பண்ணிருக்காரு ராஜா வுடைய சிஷியன் ரகுமான் பண்ணாம இருப்பாரா? தமிழ் சினிமாவுக்கு புது sounding-அ கொடுத்தவாறே அவரு தான?
திருடா திருடா படத்துல வர்ற 'ராசாத்தி என் உசுரு' பாட்டுல முழுக்க Acapella use பண்ணிருப்பாரு. ஷாஹுல் ஹமீது குரலில் ஒலித்த இந்த பாடலில், ஆண் குரல்கள் கோரஸாக தாளம் கொடுக்க, பெண் குரல்கள் கோரஸாக mood setting பண்ணிருப்பாங்க. காதலோடு வேதனையும் வலியையும் இதை விட அழகா இசைக்கருவிகள் கொண்டு கூட சொல்ல முடியாதுனு தோணுது.
சமீபத்துல வந்த பாடல்கள்-ல லாம் ரொம்ப எளிதா acapella style-அ use பண்ண முடியுது.
அதே மாதிரி acapella elements use பண்ணி வந்த பாட்டுனா அது 'கடல்' படத்துல வர 'அடியே' பாட்டு தான்.
அதுக்கு அப்பறம், 'காலா' படத்துல வந்த 'கண்ணம்மா' பாடல் எல்லோருக்கும் தெரியும். அந்த பாட்டோட acapella version-ம் album லையே இருக்கு.
இதே மாதிரி தமிழ் சினிமால acapella இப்போ ரொம்ப பிரபலமா ஆகிட்டு இருக்கு. சாதாரணமா வந்த நிறைய பாடல்கள கூட நிறைய concerts, shows ல perform பண்ணுவாங்க. youtube-ல நிறைய பெரு சாதாரண பாடல்களா கூட acapella-வா மாத்தி perform பண்ணி videos போட்டுருக்காங்க.
இதே மாதிரி உங்களுக்கு தெரிஞ்ச நாங்க மிஸ் பண்ண வேற ஏதாச்சு தமிழ் acapella songs இருந்த comment-ல சொல்லுங்க.
Commentaires