top of page
  • Ahamed Wajid

What You Didn't Know About இசை அமைப்பாளர் சந்திரபோஸ் | Music Director Chandrabose Career Facts

தமிழ் திரை இசையில் ஒரு மறந்து போன சகாப்தம் இசை அமைப்பாளர் சந்திரபோஸ். சந்திரபோஸ் அவர்கள் இசை அமைத்த பல பாடல்களை நம்மில் பலரும் இசைஞானி அல்லது வேறு சில இசை அமைப்பாளர்களுடைய இசை எனத் தவறான புரிதல் கொண்டுள்ளோம். இசை அமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களது மெட்டுக்கள் இன்றும் கேட்பதற்கு பசுமையாக உள்ளன. அவரது இசைப்பயணம் என்று, எங்கு, எவ்வாறு தொடங்கியது?





நாம எல்லாருக்கும், இளையராஜா தெரியும். ரஹ்மான் தெரியும், MSV, TMS, ஏன் தியாகராக பாகவதர கூட தெரியும். சந்திரபோஸ் என்கிற இசையமைப்பாளர, நம்மள்ல வெகு சில பேருக்கு மட்டும் தான் தெரியும்.

சந்திரபோஸ் மாதிரி சில Music directors ரொம்ப பிரபலமா ஆகாம அவங்க இசையால மட்டுமே மக்கள நெரிங்கிட்டு கடந்துறாங்க. அப்புடி இருந்தா கூட பரவ இல்ல. ஆனா, இவங்களோட composition-ல வந்த சில பாடல்கள-ல வேற ஒரு music director பேரு வந்த எப்படி இருக்கும்? அப்புடி இவரு compose பண்ணுன நிறைய பாடல்கள்-ஆ நாம இளையராஜா வுடைய பட்டு-னு நினச்சு கேட்டு ரசிச்சிருக்கோம். இளையராஜா அந்த time-ல ஏற்கனவே பயங்கர busy, தமிழ் சினிமாவுல வந்த எல்லா படத்துக்கும் அவரே music போட முடியுமா என்ன? இளையராஜா மாதிரியே நல்ல music பண்ண கூடிய சிறப்பான music director தான் சந்திரபோஸ் அவர்களும்.

நம்ம ஏற்கனவே போட்ருந்த ரகுவரன் வீடியோ-ல மைக்கேல் ராஜ் படத்துல வந்த 'காலம் பொறந்துருச்சு சின்ன மையிலே' னு ஒரு பாட்டு. அந்த பாட்ட compose பண்ணது சந்திரபோஸ் அவர்கள் தான். அந்த மைக்கேல் ராஜ் album-ஏ சூப்பர் டூப்பர் ஹிட்டு தான். ஒருவேளை அதுனால கூட அது இளையராஜா படம் னு நாம நெனச்சிருப்போம். ஏன்-னா அந்த time-ல இளையராஜா music பண்ற படங்கள்- ல பெரும்பாலும் album ஹிட் அதிகமா இருக்கும்.

கலை ஆர்வம் இருக்குற குடும்பத்துல பிறந்த சந்திரபோஸுக்கு நடிப்புல தான் ஆர்வம் அதிகமாம். நாடகங்கள்-ல நடிச்சிட்டு வந்த சந்திரபோஸுக்கு இசையமைப்பாளர் தேவா வுடைய அறிமுகம் கிடைக்கிது. அப்பறமா தான் இசை மேல அவருக்கு ஆர்வம் வந்து MSV அவர்கள் கிட்ட உதவியாளரா சேருறாரு. அதுக்கு அப்பறமா, தேவாவும் சந்திரபோஸும் ஒண்ணா சேர்ந்து 'போஸ்-தேவா' என்ற பெயரோடு இரட்டையர்களா சில ஆண்டுகள் பயணிக்கிறாங்க. அவங்க இரண்டு பெரும் சேர்ந்து compose பண்ண பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் தான். பக்தி பாடல்களுக்கு அதிகம் mouse இருக்குறத தெரிஞ்சிக்கிட்டு, அதிகமாபக்தி பாடல்கள் compose பண்றங்கா. அதுக்கு அப்பறமா சூழ்நிலை அந்த இரட்டையர்களை ஒண்ணா பயணிக்க விடல.

நாடகத்துல இவரு compose பண்றத ஒரு நாள் பார்த்த இயக்குனர் வி.சி.குகன்னாதன் அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கிட்ட பேசி, அவரோட 'மதுரகீதம்' படத்துல சந்திரபோஸ்-ஐ முதல் முறையை இசையமைப்பாளரா ஆக்குறாரு. அதன் பிறகு அவருடைய சினிமா பயணம் தொடங்குது. அதுக்கு அப்பறம் இயக்குனர் வி.சி.குகன்னாதன் இயக்குன எல்லா படத்துக்கும் சந்திரபோஸ் தான் இசை.

திரையுலகம் சந்திரபோஸ் ஐ திரும்பி பார்த்த படம் என்றால், அது 'மச்சானை பாத்திங்களா' படம் தான். அதுக்கு அப்பறம் அவருக்கு கிடைச்ச break-னா அது நம்ம தலைவர் சூப்பர் ஸ்டாருக்கு அவரு music போட்ட விடுதலை படம் தான். இந்த படத்துல வர்ற, 'நீல குயில்கள் ரெண்டு' பாடல் அந்த காலகட்டத்துல பெரிய ஹிட். சந்திரபோஸ் என்ற பெயரை எல்லாருக்கும் தெரியவெச்சது அந்த பாட்டு-னே சொல்லலாம். இனிமையான குரலையும் கொண்ட சந்திரபோஸ் அந்த பட்டு ல SPB அவர்களோட சேர்ந்து பாடியும் இருப்பாரு.

அந்த படம் வந்த அடுத்த ஆண்டு அமஞ்சிச்சு ஒரு மாபெரும் கூட்டணி. AVM-வைரமுத்து-சந்திரபோஸ். 1987-ல இருந்து 1992 வரைக்கும் வெளி வந்த அனைத்து AVM படங்களுக்கும் சந்திரபோஸ் தான் இசை. 'சங்கர் குரு' படத்துல வர 'காக்கி சட்டை போட்ட மச்சான்' பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்துச்சு. அதே மாதிரி, 'மனிதன்' படத்துல வர்ற பாடல்களை பத்தி சொல்லவே வேணாம், 'வானத்த பாத்தேன், பூமியை பாத்தேன்' னு தலைவர் ஜெயில்-ல இருந்து வெளிய வந்ததும் பாடுற அந்த பாட்டு அந்த படம் முழுக்க வந்து அந்த படத்துக்கே உயிரா இருந்துச்சு. அடுத்து, ராஜா சின்ன ரோஜாவோட காட்டு பக்கம் போனத மறக்க முடியுமா? அதே படத்துல, 'சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா?' - ஞாபகம் இருக்கா? ரஜினி அவர்களுக்கு anthem கொடுக்காத music director ஏ இல்ல போலயே.

ரஜினி anthem-னு சொல்றப்போ தான் ஞாபகம் வருது, மனிதன் படத்துல வர, 'காளை காளை, முரட்டு காளை' பாட்டு அது வரைக்கும் ரஜினி நடிச்சு வெளி வந்த எல்லா படத்தோட தலைப்பையும் பெரிய பொருத்தி வைரமுத்து எழுத, அதை அருமையா compose பண்ணி விருந்தாளிச்சாரு சந்திரபோஸ்.

'டெல்லிக்கு ராஜா னாலும் பாட்டி சொல்ல தட்டாதே!' எல்லா 90ஸ் கிட்ஸ்க்கும் இந்த பாட்டு அவளோ பரிட்சயம். மனோரமா மாதிரி ஒரு பாட்டி நமக்கெல்லாம் கண்டிப்பா இருந்திருப்பாங்க ல? இந்த பாட்ட compose பண்றப்போ இது பல தரப்பு ரசிகர்கள சென்று சேரும் னு அவரே நினைச்சிருப்பாரா னு தெரியல

AVM கூட்டணிக்கு பிறகு V.சேகர் கூட கைகோர்த்த சந்திரபோஸ், அவர் இயக்கத்துல வந்த எல்லா படத்துக்கும் இசை அமைச்சாரு.

சூழ்நிலைக்கை, போட்டிகள் காரணமா பட வாய்ப்புகள் குறைஞ்சிது, சந்திரபோஸுக்கு. அவரை எங்கே காணோம் என்று நாம எல்லாரும் தேடிட்டு இருந்தப்போ தான், திடீர்ன்னு அவருக்கு புடிச்ச நடிப்பை கையில் எடுத்து சின்னத்திரை-ல தோன்றினார். ஆச்சி international, நிம்மதி உங்கள் சாய்ஸ் மாதிரி சின்னத்திரை நாடகங்கள்-ல நடிச்சு, வெள்ளித்திரை-ல யும் வளம் வர ஆரம்பிச்ச சமயத்துல தான் அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிசிச்சை பலன் இல்லமா 2010, செப்டம்பர் மாதம் உயிரிழந்தார் இந்த மஹா கலைஞன்.

இவரு நம்மள விட்டு மறைஞ்சாலும், இவரோட கலையால நம்ம கூட எப்பவுமே வாழ்ந்துட்டு தான் இருப்பாரு.



留言


DJ on the Set

Shop for Products

bottom of page