பழைய நினைவுகள் நமக்கு சில நேரங்களில் சுகமானது, சில நேரங்களில் சுமையானது. சில நினைவுகளோ, பழைய காலம் திரும்பியும் வராத என்ற ஏக்கத்தை தரக் கூடியவை. கல்லூரி நாட்கள், கவலை இல்லாமல் திரிந்த நாட்கள் இவற்றை நினைக்கும்போது இது போன்ற ஏக்கம் தலை தூக்கும். சில பாடல்களும் நமக்கு இதே போன்ற ஏக்கத்தையும் தவிப்பையும் கொடுக்கும். இது போன்ற பாடல்கள், நம் நெஞ்சை துளைத்து சென்று இதயத்தில் தேன் வார்க்கும் தன்மை கொண்டவை. சுமையும் சில நேரங்களில் சுகமாகுமே!
இளையராஜாவின் பாடல்கள் பல இது போன்று நம் நெஞ்சை துளைத்து இதயத்தில் தேன் வார்க்கும் தன்மை கொண்டவை. அவை என்ன பாடல்கள்? அந்த பாடல்களுக்கு மட்டும் ஏன் அந்த தன்மை உள்ளன? இது போன்ற அலசல் இந்த காணொளியில் நீங்கள் காணலாம். இந்த ஒரு நாள் போதுமா? நிகழ்ச்சியில் நினைவுகளை கிளறும் பாடல்களை அசை போடுகிறார் பிரியா பார்த்தசாரதி.
Comments