top of page
  • Ahamed Wajid

திரை இசையில் தமிழ் இலக்கியம்


நிலவையும் இரவையும் எப்புடி பிரிக்க முடியாதோ;

பூவையும் தேனையும் எப்படி பிரிக்கவே முடியாதோ

தமிழ் சினிமாவையும் சங்க இலக்கியங்களையும் பிரிக்கவே முடியாது!

வைரமுத்து, நா.முத்துக்குமார், வாலி, யுகபாரதி-னு தமிழ் சினிமா கவிஞர்கள் எல்லாருமே சங்க இலக்கியங்கள நிறையா இடங்கள்ல use பண்ணிருக்காங்க...


அகநக பாடல் வரிகள் - திரை இசையில் தமிழ் இலக்கியம்


அகநக பாடல் வரிகள் தொடங்கி மற்ற எந்தெந்த பாடல்களிலே எந்த விதத்தில தமிழ் இலக்கியத்தை கையாண்டிருக்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் காணலாம்.


Narumugaiye Song


வைரமுத்து எழுதி ரகுமான் இசையுல வந்த நறுமுகையே பாடல்-ல நிறையா இடத்துல "யாயும் ஞாயும் யார் ஆகியரோ?"-ங்கிற குறுந்தொகை பாடல் வரிகள நம்மளால பாக்க முடியும்.

"செம்புலம் சேர்த்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன" -ங்கிற வரிகள கேக்குறப்போ இதே மாதிரி வரிகள எங்கயோ கேட்ட மாதிரி இல்ல?

"நீரும் செம்புல சேரும் கலந்து போலே கலந்தவர் நாம்" - வாலி அவர்கள் எழுதுன இந்த வரிகள முணுமுனுக்காம காதலர்களே இல்ல.

நறுமுகையே பாட்டுல நிறையா வரிகள்-ல சங்க இலக்கியம் இருக்கு. அப்புடி அதுல ஒரு வரில, 'அற்றை திங்கள் அவ் வெண் நிலவின்' -னு ஆரம்பிக்கிற புறநானூறு பாடல் இருக்கும். அதே, வரிய எடுத்துக்கிட்டு 'அற்றை திங்கள் வானிடம்' - னு ஆரம்பிக்கிற சிவப்பதிகாரம் படத்துக்காக யுகபாரதியும் ஒரு பாட்டையும் எழுதிருக்காரு. இது வேற ஒரு உற்சாகத்துக்கு நம்மள கூட்டிட்டு போகுது-ல.

"பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…பசலை கொண்டதென்ன" அப்புடி னு ஒரு வரி வரும். 'பசலை' ங்குற வார்த்தை, நம்ம நிறைய தமிழ் பாடல்கள்-ல கேட்டிருப்போம். 'பசலை' ங்குறது காதலி காதலனை காணாமல் வாடி பசலை இலை போல ஆகுறாங்குறத குறிக்கிற ஒரு வார்த்தையும். இந்த ஒரு வார்த்தையே கவிதையா இருக்கும் போதும் பக்கம் பக்கமா கவிதை எதுக்கு?

அந்த 'யாயும் ஞாயும்'- னு ஆரம்பிக்கிற ஒரு பாட்டு சமீபமா வந்த 'சகா'-னு ஒரு படத்துல வரும். அந்த ஒரு பாட்டு தான் அந்த படத்தையே திரும்பி பாக்க வெச்சுது னு சொல்லலாம்.

நாச்சியார் திருமொழி

ரகுமான்-அ பத்தி பேசிட்டு இசைஞானி-அ சொல்லலைனா எப்புடி, 'ஹே ராம்' படத்துல வர 'வாரணம் ஆயிரம் சூழ'-ங்குற பாடல், ஆண்டாள் எழுதுன நாச்சியார் திருமொழி நூல்-ல வர பாடல் தான்.

என்னது 'வாரணம் ஆயிரம்-அ' அப்புடின்னா கேக்குறீங்க, ஆமா கெளதம் மேனனும் இந்த நாச்சியார் திருமொழி பாடல்-ல இருந்து தான் அவரோட படத்துக்கு title வெச்சாரு. அத உறுதி படுத்துற விதமா, 'வாரணம் ஆயிரம்' படத்தோட climax இதே பாடலை சிம்ரன், dialouge-அ பேசுவாங்க.

திருஞானசம்பந்தர் எழுதுன 'இடரினும் தளரினும்' அப்புடிங்குற தேவார பாடல், இளையராஜா-வின் 1000-வது படமான தாரைதப்பட்டை படத்துல இளையராஜாவே எழுதி இசை அமைச்சிருப்பாரு. அதே படத்துல, மாணிக்கவாசகர் எழுதுன, 'பாருருவாய பிறப்பிற வேண்டும்'-னு ஆரம்பிக்கிற திருவாசக பாடலும் அமைஞ்சிருக்கும்.


புள்ளினங்காள்


நா.முத்துக்குமார் எழுதுன கடைசி பாடல், சமீபத்துல வந்த 2.0 படத்துல வர 'புல்லினங்காள்'-னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டு. அந்த புல்லினங்காள்-ங்கிற வார்த்தை, நம்மாழ்வார் எழுதுன 'திருவாய்மொழி' நூல்-ல வர ஒரு பாடல்-ல வர வார்த்தை தான். அந்த original திருவாய்மொழி பாடலை akshay குமார் அதே படத்துல பேசிருப்பாரு.



பழைய பாடல்கள்-ல சங்க இலக்கியங்களோட வெளிப்பாடு இருக்குறது ஆச்சரியம் இல்லா. ஆனா போன வருஷம் வெளிவந்த 'நட்சத்திரம் நகர்கிறது' படத்துல கவிஞர் உமாதேவி, எழுதுன 'காதலர்'-ங்கிற பாட்டு முழுக்க குறுந்தொகை, நற்றிணை, திருக்குறள்-னு எல்லா 3 சங்க இலக்கிய பாடல்களையும் contemporary இசையில கேக்குறப்போ நாம இந்த உலகத்துலயே இருக்க மாட்டோம். இந்த பாட்ட இது வரைக்கும் கேக்காதவங்க கேட்டுபாருங்க.



சங்க இலக்கிய பாடல அப்புடியே பயன்படுத்துறது ஒரு படி மேல போய் அது மாறி, மருவி, அந்த பாடல்கள்-ல இருந்து inspire ஆகி வேற ஒரு பாடல் உருவாகிறது வேற level இன்பம்-னே சொல்லலாம்.

இன்னும் நிறைய பாடல்கள் ல இதே மாதிரி சங்க இலக்கிய பாடல்கள் இடம் பெற்று இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச பாடல்கள்-அ comment பண்ணுங்க.

Комментарии


DJ on the Set

Shop for Products

bottom of page